வவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்? காடுகளில் இராணுவம் சல்லடை!

1627shares

இலங்கையில் தமிழர் பகுதியில் வீடொன்றில் உணவிற்காக சீருடை அணிந்து விடுதலைப்புலிகள் வந்ததாக கூறி பாதுகாப்பு தரப்பினர் தேடுதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியா பாலமோட்டை குஞ்சிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வீடொன்றில் திடீரென 3 நபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும் பின்பு வீட்டு அங்கத்தவா்கள் மறுப்புத் தெருவித்தவ வேளையில் பலாத்காரமாக உணவினை எடுத்து உட்கொண்டதாகவும் பின்பு அவ்வீட்டு கிணற்றினில் நீராடி விட்டு சென்றுள்ளனா் என்று தகவல் பரப்பப்பட்டுள்ளது அறிய முடிகின்றது.

பின்பு அவ்விடத்திலே அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அப்பிரதேசத்தில் பதற்ற சூழ்நிலை நிலவியுள்ளது.

குறித்த தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டது என்ற சந்தேகம் நிலவுகிறது. புலிப்பூச்சாண்டி காட்டி மக்களை திசை திருப்பும் நோக்கில் சமூகவிரோதிகள் இதன் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என மக்கள் கூறியுள்ளனர்.

ஐ பி சி தமிழ் நடாத்தும் கருத்துக்கணிப்பில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
இதையும் தவறாமல் படிங்க