இலங்கையில் மாணவியொருவரின் செயலால் பேரதிர்ச்சியடைந்த குடும்பம்; பெற்றோர்களே எச்சரிக்கை!

1196shares

மாணவியொருவர் தனது வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொனராகலை , மெதகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , சில மாதங்களுக்கு முன்னர் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த இளைஞரொருவருடன் குறித்த மாணவி காதல் தொடர்பினை பேணி வந்துள்ள நிலையில் குறித்த இளைஞரால் மாணவி பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு , நேற்று (25) பிபில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோர் கூடிய கவனம் செலுத்துமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க