யாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம்! திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி!!

2760shares

முல்லைத்தீவு பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றினுள் சட்ட விரோதமான முறையில் கள்லச் சாராயம் வடித்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலணி பகுதியில் உள்ள யாருமற்ற வீட்டிலேயே இந்த திடீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.சந்திரபால தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்போது கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டமூவரை நேரில் கண்டதுடன் கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்த கசிப்பு காய்ச்சுவதற்காக பயப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட 05 பெரல் கோடா, 20 லீற்றர் கசிப்பு என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

சுதந்திரபுரம் கொலனி பகுதியில் மக்களின் பாவனையற்ற வீடுகளை பயன்படுத்தி சட்டவிரோ செயல்கள் அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இந்த நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க