யாழில் நேற்றிரவு பயங்கரம்; கத்தியால் குத்திய அண்ணனை அடித்துக் கொலைசெய்த சகோதரன்!

580shares

எச்சரிக்கை: கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம். நிதானத்துடன் தொடரவும்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - திக்கம் பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் மூத்தவர் என்றும் இந்த கொலையின் சந்தேக நபரான அவரது தம்பி இதில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபர் நேற்றிரவு எட்டு மணியளவில் தனது சகோதரரிடம் வழங்கிய இரண்டு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்வதற்கு சென்றபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து இந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி அடிதடிவரை சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்போது கடன் கொடுத்தவர் தனது தமிபி மீது கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து கடன் வாங்கியவர் தனது அண்ணனை பொல்லால் அடித்துள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்தவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபரும் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க