யாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்!

3106shares

இலங்கை சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாட்டுக்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கான அபிவிருத்திப் பணிகளை சிறிலங்கா விமானப் படையினரைக் கொண்டு துரிதமாக மெற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறிப்பாக நேர அட்டவணைக்கு அமைய சர்வதேச வர்த்தக பயணிகள் விமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையம் பயன்படுத்தப்படும் என்றும் இந்த விமான நிலைய அபிவிருத்தி பணிகளை 1950மில்லியன் ரூபா முதலீட்டுடன் இலங்கை விமானப் படையின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்றும் குறித்த அமைச்சரவ அங்கீகரித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த ஆவணத்தை சிறிலங்காவின் பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் ஆறறல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க