கொழும்பில் உணவகத்தில் பனிஸ் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பின்பு நடந்த எதிர்பாராத நன்மை!

1232shares

கொழும்பிலுள்ள பிரபல தனியார் உணவகத்தில் பனிசை கொள்வனவு செய்த பெண்ணிற்கு நட்டயீடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்குமாறு கொழும்பிலுள்ள குறித்த உணவக உரிமையாளருக்கு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷசீ மகேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த பெண் மருதானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சட்டை ஊசியுடன் கூடிய பனிசை கொள்வனவு செய்துள்ளார். இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளருக்கு தெளிவுப்படுத்திய போதும் அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் குறித்த பெண்ணை தகாத வார்த்தைகளால் தூற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்தே குறித்த பெண் அந்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததனடிப்படையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க