கட்டுநாயக்கவில் திடீரென்று எழுந்து ஆடிய பெண் ஊழியர்கள்; அதிர்ச்சியடைந்த மக்கள்!

321shares

தாய்லாந்து நாட்டின் லயன் எயார் விமான சேவை, வரலாற்றில் முதன்முதலாக இலங்கைக்கான நேரடி விமான சேவையை கடந்த புதன்கிழமை ஆரம்பித்துள்ளது.

இதன்படி கடுநாயக்கவிலிருந்து பாங்கொக் வரை இந்த புதிய பயணச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தாய் லயன் எயார் சபைத் தலைவர் கப்டன் தர்சிடோ ஹென்றோசெபூட்ரோ தெரிவிக்கையில்,

“இலங்கையிலிருந்து அதிக பயணிகள் தாய்லாந்து நாட்டுக்குச் செல்லும் பயண அனுபவத்தைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளனர். இயற்கை மற்றும் பாரம்பரிய கலாசாரங்களைப் பின்பற்றும் இடங்களில் தாய்லாந்தும் ஒன்றாகும். பாங்கொக் பல கவர்ச்சிகரமான இடங்களைக் கொண்டுள்ளது. கோவில்கள், அரண்மனைகள் போன்ற மையங்கள் இங்கு உண்டு. தெருவில் விருப்பமான உணவுகளைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவான கடைகள் மற்றும் பிரபலம் மிக்க சந்தைகள் உள்ளன. லயன் எயாரில் தாய்லாந்துக்கு வருபவர்கள் தனியே பாங்கொக்குக்கு மட்டும்தான் போகலாம் என்று இல்லை. இவர்கள் ஏனைய உள்நாட்டு இடங்களுக்கும் செல்லக்கூடியளவுக்கு லயன் எயார் நிறுவனம் வெவ்வேறு போக்குவரத்து வழிமுறைகளைக் கொண்டுள்ளது. பாரம்பரியமிக்க வியத்தக் இடங்களுக்கு செல்லமுடியும். காதலர்களுக்கு ஏற்ற கடற்கரைகளுக்கு செல்லலாம். அங்கு சூரியக் குளியலை அனுபவிக்கலாம்.” என்றார்.

இதேவேளை புதன்கிழமை தாய்லாந்து லயன் எயார் நிறுவனத்தை வரவேற்கும் நிகழ்வவொன்று விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் விமான நிலைய பெண் ஊழியர்கள் திடீரென்று எழுந்து ஆடியுள்ளனர்.

இதனால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இதனைக் கண்டு குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் கூறின.

எவ்வாறாயினும் ஊழியர்கள் நடனம் ஆடியமைக்கான காரணம் தெரிந்ததும் பயணிகள் ஆச்சரியத்துடன் அதுகுறித்து விசாரித்ததாக மேலும் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க