இன்று சிங்களவர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்!

511shares

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு பொதுமகன் ஒருவர் பத்திரிகை விளம்பரம் கொடுத்துள்ளார்.

லங்காதீப பத்திரிகையிலேயே இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. பேஸ்லைன் வீதி, கொழும்பு-8 எனும் முகவரியைச் சேர்ந்த U.H அசோக என்னும் நபரால் இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதன்படி,

”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களே, நாட்டில் முப்பது வருடகாலமாக நிலவிவந்த கொடிய யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி. அதன்படி அந்த யுத்தத்தில் ஈடுபட்டு மக்கள் அபிமானத்தையும் தேசத்தின் மதிப்பையும் பெற்ற கோத்தபாய ராஜபக்‌ஷ அவர்களை நாட்டு நன்மை கருதி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையான தேசாபிமானி U.H அசோக” என்று அதில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்த விளம்பரம் முதன்முதலாக பொதுமகன் ஒருவரால் பத்திரிகையில் கொடுக்கப்பட்டதனால் தென்னிலங்கையில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க