முகநூல் விருந்தொன்றில் ஆறு பெண்கள் உட்பட 89பேர் கொத்தோடு கைது!

96shares

வட மத்திய மாகாணம் பொலநறுவ மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றில் போதைப் பொருள் சார்ந்த விருந்து ஒன்றிலிருந்து பெண்கள் உட்பட பலர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலநறுவ மாவட்டத்தின் ஹிங்கிராங்கொட பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தே இவர்கள் அதிரடியாக கைதாகியுள்ளனர்.

முகநூலில் அறிமுகமாகிய நட்புப் பட்டாளம் ஒன்று பொதுவெளியில் சந்திப்பு ஒன்றினை நடத்துவதற்காக ஹிங்கிராங்கொட பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றினைத் தெரிவு செய்ததாகவும் அங்கு விருந்து ஒன்றிற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விருந்தின்போது போதை மருந்து மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள் பாவனை இருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஹோட்டலினைச் சுற்றிவளைத்த பொலிஸார் போதை மருந்துகளுடன் ஆறு பெண்கள் உட்பட 89பேரைக் கையும் களவுமாக கைதுசெய்தனர்.

தற்பொழுது இதுகுறித்த விசாரணைகளை மெற்கொண்டுவருவதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க