யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த மோசமான சம்பவம் குறித்த காணொளி வெளியானது!

1151shares

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் தாதியர்கள் மேற்கொண்ட திடீர் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் நடுவழியில் கைவிடப்பட்டு அவதியுற்றதாக பாதிக்கப்பட்டோர் கவலை வெளியிட்டுள்ளனர்

வைத்தியசாலையில் பணிபுரியும் இரண்டு தாதியர்கள் குறித்து சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக வைத்தியசாலையில் இன்றைய தினம் குழப்பமான நிலை காணப்பட்டது.

தம்மீது சுமத்தப்பட்ட அவதூறு குறித்து நீதி வேண்டுமென தெரிவித்த தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காலையில் ஸ்கான் எடுப்பதற்காகவும் மருந்து கட்டுவதற்காகவும் விடுதிக் கவனிப்பாளர்களால் (Attender) விடுதிக் கட்டில்களிலிருந்து நகர்த்தப்பட்டிருந்த நோயாளிகள் இந்த திடீர் புறக்கணிப்பின் காரணமாக அந்தந்த இடத்திலேயே கைவிடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இதனால் விடுதிக் கவனிப்பாளர்களுக்கும் நோயாளர்களுக்குமிடையே சற்று முறுகல் நிலை காணப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்த காணொளியை இங்கு இணைக்கின்றோம்..

இதையும் தவறாமல் படிங்க