அரச அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண்! பின்னர் நடந்த விபரீதம்!

74shares

இந்தோனேசிய விசா அதிகாரியின் கன்னத்தில் அறைந்த லண்டன் பெண்ணுக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விசா காலாவதியான பிறகும் அதிக நாட்கள் தங்கியிருந்ததால் 4 ஆயிரம் டொலர்கள் அபராதத்தைச் செலுத்தும்படி விசா வழங்கும் அதிகாரி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் போது தகாத வார்த்தை் பிரயோகங்களை பயன்படுத்தி வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார்.

இதனிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், குறித்த பெண் விசா அதிகாரியின் கன்னத்தில் பலமாக அறைந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

அவுஜ்-இ-தகதாஸ் என்னும் பிரிட்டிஷ் பெண்மணி கடந்த ஆண்டு,சுற்றுலா விசாவில் இந்தோனேசியா வந்துள்ளார். 43 வயதான அவர் மருத்துவ ஆராய்ச்சியாளர். இவர் தன்னுடைய விசாவுக்கான கெடு முடிந்தும் லண்டன் திரும்பிச் செல்லவில்லையென தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்த இந்தோனேசிய நீதிமன்றம், அரசஅதிகாரிக்கு எதிராக வன்முறையாக நடந்துகொண்டதால், அவுஜுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளிப்பதாகத் தெரிவித்தது.

ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்த அவுஜ், காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டு அதிகாரிகள் அவரின் கைகளில் விலங்கிட்டு, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் தவறாமல் படிங்க