இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் வருகிறது மாற்றம்!

66shares

விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய. ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்றைய தினம் விடுமுறை என்பதனால், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு தீர்மானிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்போது அதிகரித்துள்ள பின்னணியில், இன்றைய தினம் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திரத்துக்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இரண்டு ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை மூன்று ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க