தற்கொலைகளை தடுக்கும் முயற்சியில் உளவியல் ஆலோசனை மய்யம்!

  • Sethu
  • February 11, 2019
15shares

உளவியல் ஆலோசனை மய்யத்தின் ஏற்பாட்டில் உளவியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும், பயிற்சி பட்டறை செயலமர்வும் சனிக்கிழமை மட்/ கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் அனுமதியுடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் இப்பாடசாலையில் ஆண்டு 10 தொடக்கம் உயர்தரம்வரை கல்வி பயிலும் சுமார் 100 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தேர்ச்சி பெற்ற வளவாளர்களான பியோ ஜூட் நவிந்தன் ( வேல்ட் விஷன் ஏறாவூர் பற்று முகாமையாளர்) சின்னத்துரை வென்ஜமின் ( வேல்ட் விஷன் அலுவலகர்) ஆகியோரால் நடாத்தபட்ட இக்கருத்தரங்கு, அண்மைக்காலத்தில் எமது பிரதேசங்களில் வயது வேறுபாடின்றி அதிகரித்துவரும் தற்கொலை சம்பவங்களை கருத்தில்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உளவியல் ஆசிரிய ஆலோசகர் ரி.குணரெத்தினம் மற்றும் பாடசாலை அதிபர் செந்தில்நாதன் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரவித்தது இருந்தனர்.

இது தொடர்பில் உளவியல் ஆலோசனை மய்யத்தின் தலைவர் செ.நிவேதித் மற்றும் ஊடக பேச்சாளர் ஜெய்காந் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலங்களில் தற்கொலைச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றது. இதில் வயது வித்தியாசம் இல்லை. பிரச்சினைகளும் உயிரை மாய்த்துக்கொள்ளுமளவு தீவிரமானதாக இருக்கின்றதென்று சொல்லிவிடமுயாது. ஆனால் முடிவு மட்டும் தற்கொலை என்றாகிவிடுகின்றது. எனவே, நீண்டகால நோக்கில் இதனை தடுக்க ஒரு செயற்திட்டம் தேவையென உணர்ந்தோம்.


அதன்முதற்கட்டமாக இலங்கை, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து அல்லது தொழில் நிமிர்த்தம் வசிக்கின்ற சமூக ஆர்வர்கள் ஒன்றிணைந்து “ உளவியல் ஆலோசனை மய்யம்” என்ற அமைப்பை உருவாக்கினோம். சமூக வலைத்தளங்கள்மூலம் அதனை மக்களிடம் கொண்டு சென்றோம். 24X7 மணிநேர தொலைபேசியூடான உதவிச்சேவை ஒன்றை ஆரம்பித்தோம். உதவிகோரி ஏராளமானோர் அழைப்புக்களை மேற்கொண்டனர். அவரவர் தேவைகளுக்கேற்ப பொருளாதார மற்றும் சட்ட, உளவியல் ஆலோசனைகளை வழங்கிவருகின்றோம்.

இதையும் தவறாமல் படிங்க