டுபாய் பொலிஸாரின் அடுத்த அதிரடி; இலங்கையை அதிரவைத்த மற்றொருவர் கைது!

432shares

பாதாள உலகக் கும்பலின் தலைவரான மாக்கந்துர மதுஷின் நெருங்கிய சகா டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுஷின் வலது கையாக செயற்பட்ட அங்கொட லொக்கா டுபாய் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த நிலையில் நேற்றைய தினம் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுஷ் உள்ளிட்ட கும்பல் டுபாயில் கைதுசெய்யப்பட்ட அன்றைய நாளில் அங்கொட லொக்கா தப்பியோடியிருந்தார். இவரைத் தேடும் பணிகளை தீவிரமாக முடுக்கிவிட்டிருந்த டுபாய் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த நபரை அடையாளம் கண்டதாக சொல்லப்படுகிறது.

இதன்பின்னர் அங்கொட லொக்காவை பின்தொடர்ந்துவந்த பொலிஸார் நேற்றைய தினம் அடிரடியாக கைதுசெய்தனர்.

அங்கொட லொக்கா தப்பியோடிய வாகனம் நவீன தொழி நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டதாக டுபாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாகந்துர மதுஷ் மற்றும் அங்கொட லொக்கா உள்ளிட்ட கும்பல் கடத காலங்களை நாட்டையே அதிருமளவுக்கு பல்வேறு குற்றச் செயல்கள மேற்கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க