கிளிநொச்சியில் போதைப் பொருளுடன் சிறுவன் கைது!

16shares

கிளிநொச்சி தர்மபுரம் புளியம்பொக்கணை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கோடா உடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நான்கு பரல் கோடாவும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவற்துறைமா அதிபரின் விசேட போதைப் பொருள் பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

மாவட்ட விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக காவற்துறை அதிகாரி சத்துரங்க தலைமையில் சென்ற ஏழு பேர் அடங்கிய குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர்.

இதில் நான்கு பரல்கள் கோடாவும் 21 கசிப்பும் காணப்பட்டன. கைப்பற்றப்பட்ட கோடாவினையும் கைது செய்த சிறுவனையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க