ஊழல் ஒழிப்பு அதிகாரி மீது ஐ.க எம்.பி தாக்குதல்!

6shares

பண்டாரவளை ஊழல் ஓழிப்பு பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

தாக்குதலை நடாத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் பயணித்த வாகனத்தை விலகிச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே,இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான காவல்துறை உத்தியோகத்தர் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினாலேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க