காத்தான்குடியில் ஆயுதங்களுடன் நின்றவர்கள் யார்? மீண்டும் ஆயுதக் கலாசாரம் உருவாக்கப்படுகிறதா?

  • Sethu
  • February 11, 2019
269shares

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது விளையாட்டுப் போட்டியில் ஆயுதங்களுடன் நின்றவர்கள் யார்? அவர்கள் மாணவர்களா? அல்லது இராணுவத்தினரா? அல்லது ஆயுதக்குழுவா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது விளையாட்டுப் போட்டியில் நடந்ததாக கூறப்படும் ஆயுதம் தாங்கிய குழு ஒன்றின் அணிவகுப்பு படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை ஒன்றின் விளையாட்டுப் போட்டியில் எதற்காக ஆயுதம் தாங்கியவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது அதுவும் குறித்த அணிவகுப்பில் ஆயுதங்களுடன் நிற்பவர்கள் மாணவர்களா? அல்லது இராணுவத்தினரா? அல்லது ஆயுதக் குழுவா என்பது புரியாத புதிராக உள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் ஊக்குவிக்கின்றதா? என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது. முஸ்லீம் மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதன் குறித்த நிகழ்வு அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதம் தாங்கிய குழுவினரால் இராணுவ மரியாதையுடனான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளது.

முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என ஹிஸ்புல்லா சில வருடங்களுக்கு முதல் காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

காத்தான்குடியில் பெருந்தொகையானவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்ட வரவேற்றில் துப்பாக்கிகளுடன் இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க