சற்றுமுன் பிரபல பாடகருக்கு ரணில் வழங்கிய பதவி!

95shares

ஐக்கிய தேசியக் கட்சி தனது அமைப்பாளர்கள் சிலரை இன்றைய தினம் நியமித்துள்ளது.

இதில் பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி தென்னிலங்கையின் பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தம்பதெனிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் லலித் திசாநாயக்க அரநாயக்கவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மேலும் திலின பண்டார தென்னக்கோன் நீர்கொழும்பு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதையும் தவறாமல் படிங்க