யாழில் இன்று நடந்த பயங்கரம்; 6 பேர் கொண்ட கும்பலின் விஷமச்செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!

461shares

யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம்பெற்று வாகனம் எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்.,

இன்று மாலை 3.10 மணியளவில் யாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் இருவர் வீட்டுக்கு வெளியே நிற்கும் போது நாலு பேர் உள்ளே நுழைந்து மோட்டார் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு பெட்ரோல் குண்டு குண்டு தாக்குதலை மேற்கொண்டதோடு வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளார்கள்.

குறித்த விடயம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகியும் போலீசார் அந்த இடத்திற்கு வருகை தரவில்லை, குறிப்பாக குறித்த சம்பவம் நடந்த வீட்டுக்கு கடந்த சில காலங்களுக்கு முன்னர் வீட்டில் கதவானது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதலுக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க