வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களின் முன்மாதிரியான செயல்!

53shares
Image

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 1997-ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் இன்று 11.02.2019 பிற்பகல் 3மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வசதியற்ற 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 1997 நண்பர்கள் வட்டத்தினால் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து வவுனியா மாவட்ட செலயகத்தின் மாவட்ட சிறுவர் சபையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வசதியற்ற பாடசாலை செல்லும் 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உதவி மாவட்ட மேலதிக செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜே.ஜெயகெனடி, மாவட்ட சிறுவர் சபை உத்தியோகத்தர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 1997 நண்பர்கள் வட்ட பழைய மாணவர்களான ந. செல்வக்குமார், மு. ஜெயக்குமார், வே.பிரகாஸ், க.கமலசீலன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், மாவட்ட செலயகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம அலவலகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க