ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர்கள்!

14shares

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைப்பாளர்கள் 6 பேர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவினால் நியமனம்பெற்றார்கள்.

இதனடிப்படையில் தம்பதெனிய தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக பிரபல சிங்கள மொழிப்பாடகர் ரூகாந்த ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பின் அமைப்பாளராக பா.உ காவிந்த ஜயவர்தனவும், அரநாயக்க அமைப்பாளராக சுதந்திர கட்சியின் முன்னால் பிரதியமைச்சரான லலித் திஸாநாயக்கவும் கண்டி-பாததும்பர அமைப்பாளராக முன்னால் மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் ஆகியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு வாரியபொல மற்றும் ஹிரியால ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கான அமைப்பார்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க