முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இராணுவத்தினர்!

17shares

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.

செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் ஒளிப்படம் எடுத்ததுடன் கமராவினையும் பறிக்க முற்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரினை எடுத்து செல்வதால் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் நிலக்கீழ் நீர் வற்றுவதுடன், தமது கிணறுகளிலும் நீர் மட்டம் குறைவடைவதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் குறித்த குழாய் கிணற்றில் இராணுவத்தினர் நீரை எடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிளும் பொதுமக்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டதால் அங்கு படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்து வகையில் படையினர் ஒளிப்படம் எடுத்ததுடன் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் கமராவினை இராணுவம் பறிக்க முற்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

ஊடகவியலார்களை புகைப்படம் எடுத்த இராணுவம் மற்றும் இராணுவ அதிகாரிகள் கடு தொனியில் எச்சரிக்கையும் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளரான செல்வராசா சுமந்தன் என்பவரது கமெராவை பறிக்க முற்பட்ட மேஜர் தர படை அதிகாரி ஒருவர் கமெராவில் என்ன உள்ளது கமெராவை காட்டு என கடும் தொனியில் அச்சுறுத்தும் வகையில் வினவியுள்ளார்.

மக்கள் எமக்கு எதுவும் முறையிடவில்லை ஊடகவியலாளர்கள் நீங்கள் தான் பிரச்சினையை ஏற்படுத்துகிண்றீர்கள் என படையினர் ஊடகவியலாளர்களை பார்த்து கடும் தொனியில் கூறியதாகவும் எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடகவியலாளர்களால் இந்த சம்பவம் தொடர்பான உண்மை வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க