ரணில் தலைமையிலான அரசாங்கம் முன்மொழிந்துள்ள தேசிய அரசாங்க திட்டம்; நிராகரித்த மனோ!

9shares

ரணில் தலைமையிலான அரசாங்கம் முன்மொழிந்துள்ள தேசிய அரசாங்க திட்டத்தை பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சருமான மனோ கணேசன் நிராகரித்துள்ளார்.

தேர்தலில் வாக்கு பெற்ற அரசியல் பிரதிநிதிகள் மக்களைப் பற்றி சிந்திக்காது தமது கட்சியினையும் தமது குடும்பத்தினையும் மாத்திரமே நினைத்து செயற்படுவதாகவும் அவர் பாரதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கண்டி மாத்தளை பிரதேசத்தில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் நடமாடும் சேவை நிகழ்வொன்றினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் முன் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேஷன், ரணில் மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கம் இறுதியில் பிரச்சினையில் முடிவடைந்த காரணத்தினால் மேலுமொரு தேசிய அரசாங்கம் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை ஐக்கிய தேசியக் முன்னணி முடிவு செய்துவிட்டதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் அடித்துக் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க