நளினி முருகன் தொடர் உணவு தவிர்ப்பில்!

28shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன், நளினி ஆகியோர் தொடர் உணவு தவிர்விப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என இந்திய ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நளினியின் கணவர் வேலூர் ஆண்கள் சிறையில் கடந்த 2ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார். அவருக்கு ஆதரவாக நளினி கடந்த சனிக்கிழமை முதல் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பதற்கான தீர்மானத்தை ஆளுனர் மேற்கொள்ள முடியும் என இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கும் போதும், ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தீர்மானம் வெளியிடுவதில் தாமதித்து வரும் நிலையில் தங்கள் அனைவரினதும் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரி இருவரும் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க