மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!

  • Shan
  • February 12, 2019
20shares

மூன்றரை வயது மகளை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், தந்தை ஒருவருக்கு அநுராதபுர மாவட்ட உயர்நீதிமன்றம் நேற்றையதினம் மரணதண்டனை விதித்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

உபேகா லக்மாலி என்ற தனது மூன்றரை வயது மகளை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவர் சம்பத்கம என்ற இடத்தில் ரணதுங்க என்ற தனது பெயரை மாற்றி காமினி என்ற பெயரில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படுவதால் அவருக்கு மரணதண்டனை விதிப்பதாக நீதிபதி மகேஷ் வீரவான் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க