நான்கு நாட்களாகியும் மின்சாரம் இல்லை! பாதிப்பில் மக்கள்

6shares

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் வீதி புனரமைப்பின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் நான்கு நாட்கள் கடந்தும் இதுவரையில் மீள கொடுக்கப்படாததால் அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தபுரம் பகுதியில் ஒரு வீதி சீரமைப்பின் போது கனரக இயந்திரம் மூலம் வீதியின் இரு புறமும் வெட்டப்பட்டதன் காரணமாக மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த பிரதேசத்தின் மின்சாரம் கடந்த சனிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

அன்று தொடக்கம் இன்று(12) வரை கிளிநொச்சி மின்சார சபைக்கு பொது மக்களால் அறிவித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலைமை காரணமாக வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாரம்தூக்கி இல்லாத காரணமாக கடந்த சில நாட்களாக பணிகளை மேற்கொள்ளவில்லை என மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க