உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் திடீர் மரணம்; கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

304shares

உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து கால்ப்பந்து விளையாட்டு வீரரான கோர்டன் பாங்ஸ் தனது 81ஆவது வயதில் காலமானார்.

கடுமையான புற்று நோயினால் அவதியுற்றுவந்த நிலையில் அவர் இன்று திடீரென காலமாகியதாக இங்கிலாந்து செய்திகள் கூறுகின்றன.

1966ஆம் ஆண்டு காற்பந்தாட்டத்தில் வெற்றிவாகை சூடிய இங்கிலாந்தின் பிரதான பந்து தடுப்பாளராக விளங்கிய கோர்டன் பாங்க்ஸ் அன்றைய நாட்களில் இங்கிலாந்தில் புகழ் உச்சிக்கு காரணமாக இருந்தார் என கூறப்பட்டுள்ளது.

பாங்ஸ் இறக்கும்போது அவரது மனைவியான உர்சுலா, மற்றும் மூன்று பிள்ளைகளான ஜூலியா, ரொபேர்ட், வெண்ட்லி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

சமீப காலமாக புற்று நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பாங்ஸ் கீமோதெரொபி சிகிச்சையினால் ஹோமா நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

கோர்டன் பாங்ஸின் மறைவால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க