மைத்திரியின் உறுதியான தீர்மானத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஆதரவு!

47shares

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அமைச்சரான தயா கமகே தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடும் இல்லையெனவும் ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரான அமைச்சர் தயா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து தேசிய அரசாங்கத்தில் இருந்து தனது தலையின் கீழ் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஜனாதிபதி விலக்கிகொண்டிருந்தார்.

அத்துடன் முரண்பாட்டின் உச்சமாக முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து நாட்டில் அரசியல் நெருக்கடியையும் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியிருந்தார்.

அத்துடன் நாடாளுமன்றதையும் கலைத்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த போதிலும், அதனை உச்சச நீதிமன்றம் இரத்துச் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்தும் ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் பல்வேறு விடயங்களில் ஜனாதிபதி கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ள நிலையில், தனது அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே, ஜனாதிபதியுடன் எந்தவொரு முரண்பாடும் இல்லை எனக் கூறியுள்ளார்.

தயா கமகே - அரசாங்கத்தை நடைமுறைப்படுத்திச் செல்ல எமக்கு 113 எனும் பெரும்பான்மை அவசியம் இல்லை. அதேவேளை எமக்கு எதிராக 113 எனும் பெரும்பான்மை இருக்குமாயின் எம்மால் அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தி செல்ல முடியாது. உலகில் பல அரசாங்கங்கள் பெறும்பான்மை இல்லாத சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு எதிரான பெரும்பான்மையும் இல்லாத காரணத்ததினால் இயங்கிக் கொண்டு உள்ளன. தற்போது மஹிந்த ராஜபக்ச திடீரென ஒரு நாள் இரவில் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் அவருக்கு எதிராக நாடாளுமன்றில் பொறும்பான்மையொன்று காணப்பட்டது. அதேபோல பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிராக பெறும்பான்யொன்று காணப்படுமாயின் எமக்கு அரசாங்கத்தினை செயற்படுத்திச் செல்ல முடியாது. அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முரண்படவோ மோதிக்கொள்ளவோ எந்தவொரு தேவையும் இல்லை. எமக்கு இனி வரும் காலங்களில் ஆட்சிமாற்றத்தினால் எழுந்த பிரச்சினைகளின் காரணமாக பின்னடைவைச் சந்தித்த நாட்டை எப்படி முன்நோக்கி நகர்த்தி செல்லவது என்ற யோசனையே உள்ளது. அதனால் நாம் ஜனாதிபதியுடன் முரண்படச் செல்லாமல், எப்படி முன்னேறிச் செல்வது என்பதனையே அவதானிக்கின்றோம். அதனையும் தாண்டி தொடர்ந்து ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்கு தீர்க்க முடியாத பிரச்சினை ஏதும் எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இலையென்பதே உண்மை.

போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து நாடு விடுபடுவதற்குள்ள ஒரே வழி சிங்கப்பூரினைப் போல சிறிலங்காவிலும் மரண தண்டனை நிறைவேற்றுவது மாத்திரமே என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மரண தண்டனை அமுலாக்கத்திற்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையில் அவர் இந்த கருத்தைக் கூறியுள்ளார்.

தயா கமகே - தொடர்ந்து போதைப்பொருள்களை கைப்பற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிஸ் மற்றும் சுங்கப் பணியாளர் மேற்கொள்ளக் கூடிய வேலையே இது. அமைச்சர்கள் என்ற காரணத்தினால் எம்மால் இதனை மேற்கொள்ள முடியாது. தற்போது போதைப்பொருள்களை கொண்டுவரும் செயற்பாடு தடையினை மீறி செயற்படும் ஒன்றாகும். எனினும் சிறிலங்காவிற்கு போதைப்பொருள் தொடர்ந்து கொண்டு வரப்படுகிறது, கடந்த காலங்களில் வந்துள்ளது. நான் சமூக வலைத்தளத்தில் ஒன்றைப் பார்த்தேன். அதில் அவர் எமது இந்த அரசாங்கத்தினை பிரச்சினை எனத் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கடந்த காலங்களினை போலல்லாது நடைமுறையில் போதைப்பொருட்கள் இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அதிக விலையில் இருப்பதாகவும் அதனால் இந்த அரசாங்கம் பிரச்சினைக்குறியது என குறிப்பிட்டிருந்தார். எமது அரசாங்கம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் போதைப்பொருட்களை கொண்டுவரும் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன. அத்தோடு போதைப்பொருட்களை கைப்பற்றும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் நூறு வீதம் அந்த செயற்பாடு முழுமை காணவில்லை. அப்படி இந்த செயற்பாட்டில் நூறு வீதம் திருப்தியை நாம் காண வேண்டுமெனின் சிங்கப்புரினைப் போல எமது நாட்டிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்ப்புரில் நபரொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டால் அவரை அதன் பின்னர் யாராலும் காப்பற்ற் முடியாத நிலையே உள்ளது. சட்டம் முறையாக செயற்பட வேண்டும். அவ்வாறு சட்டம் முறையாக செயற்பட்டால் மாத்திரமே இந்த போதைப்பொருள் மாபியாவை எம்மால் தடுத்து நிறுத்த முடியும். சில சந்தர்ப்பங்களில் பொலிஸ் அதிகாரிகளும் கூட இந்த போதைப்பொருள் வர்தகத்தில் ஈடுபட்டடுள்ளமை தெரியவருகின்றது. எனினும் இதனை முறையான அதிகாரிகளே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

இதையும் தவறாமல் படிங்க