’உன்னைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்’ காதல் விவகாரத்தால் இளைஞன் தற்கொலை!

492shares

யாழ்ப்பாணம் சாகவகச்சேரியில் புகையிரத்திற்கு முன் விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உன்னைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்“ என நண்பருடன் தொலைபேசில் கதைத்தவாறு ரயில் குறித்த இளைஞர் ஒரு உயிரை மாய்த்துள்ளார்.

ரயிலுடன் மோதுண்ட இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சாயைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

காதல் பிரச்சினை காரணமாக இளைஞன் மனச் சோர்வுக்குள்ளாகியிருந்தார். அவர் நண்பருக்கு அழைப்பெடுத்து "நான் உன்னைவிட்டு தொலை தூரம் செல்லப்போகின்றேன்" என்று கூறியவாறு ரயில் முன்பாய்ந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க