யாழில் பதற்றம்: இரு வீடுகள் மீது குண்டுத் தாக்குதல்!

149shares

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பிரதேசத்தில் இன்று இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டார்ச் சைக்கிள்களில் கறுப்புத் துணிகளால் முகங்களை மறைத்துக் கொண்ட வந்த கும்பல் ஒன்றே வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மற்றும் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

அத்துடன் மேல்மாடி வீட்டின் முன்பகுதியும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் வீட்டிலிருந்தவர்கள் ஒளிந்து கொண்டமையால் காயங்கள் எதுவுமின்றித் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் தீயினைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதேவேளை, கொக்குவில் கலைவாணி சனசமூக நிலையத்திற்கருகிலுள்ள வீடொன்றின் மீதும் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க