மோட்டார் சைக்கிள் - வடி ரக வாகனம் மோதி விபத்து! ஒருவர் பலி!

6shares

சற்று முன்னர் மட்டக்களப்பு, தாழங்குடா (ஒல்லிக்குளம்) மண்முனை பிரதான வீதி வீதியில் வடி சிறிய ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 44 வயதுடைய எம்.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகளின் படிப்பிற்காக கல்லடி , நாவற்குடாவில் வாசித்து வந்த இவர் கொக்கட்டிச்சோலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது .

சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

இதையும் தவறாமல் படிங்க