சுடர்விட்டுப் பிரகாசிக்கவுள்ள தமிழர் கடற்கரைகள்!

  • Shan
  • March 11, 2019
246shares

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு கலங்கரை விளக்கங்கள் (வெளிச்சவீடு) மீண்டும் புனரமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த கலங்கரை விளக்கங்களைப் புனரமைக்கும் பணிகள் இவ்வருட இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு வெளிச்சவீடு முழுமையாக சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இதனைப் புதிதாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள வெளிச்ச வீடுகள் கடந்த கால யுத்த நிலைமைகளின்போது பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நீண்டகாலமாக செயற்படுத்தப்படாமல் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத நிலையில் மீண்டும் புனரமைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கங்களில் அதி நவீன மின் விளக்குகள் பொருத்தப்படுவதுடன் அவர் கடலை நோக்கி பல சுடர்களை பரப்பும் தன்மைவாய்ந்தவையாக விளங்கும் என கூறப்பட்டுள்ளது.

படம்: காரைநகர் கோவளம் வெளிச்சவீடு

படம்: தலைமன்னார் வெளிச்சவீடு

படம்: மட்டக்களப்பு வெளிச்சவீடு

படம்: காங்கேசன்துறை வெளிச்சவீடு

படம்: திருகோணமலை வெளிச்சவீடு

இதையும் தவறாமல் படிங்க