எதியோப்பிய விமான விபத்திலிருந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி! (வீடியோ இணைப்பு)

  • Shan
  • March 11, 2019
1372shares

அண்மையில் இடம்பெற்ற விமான விபத்துக்களில் உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துருக்கிறது எதியோப்பியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாரிய விமான விபத்து.

இதில் 157 மனிதர்கள் உடல் சிதறி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து உலக மக்கள் மீளாத நிலையில் குறித்த விமான விபத்து தொடர்பான தகவல்கள் வந்தவண்ணமேயுள்ளன.

விமானத்தில் பயணித்த பயணிகள் சிப்பந்திகள் என அனைவருமே பலியாகிவிட்ட நிலையில் குறித்த விமானத்தைத் தவறவிட்டதால் பயணி ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்லவிருந்த mavropoulos antonio என்பவர் இரண்டு நிமிடங்கள் தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததால் விமானத்தைத் தவறவிட்டுள்ளார்.

குறித்த நபர் தாமதமாக வந்தபோது விமான நிலையத்தின் புறப்பாடு கதவு மூடப்பட்டுவிட்டது. இதனால் அவர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவருக்கு யாருமே உதவவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில் அவர் அந்த விமானப் பயணத்தை தவறவிட்டதால் அந்த பாரிய விபத்திலிருந்து தப்பிவிட்டார்.

இதுகுறித்த மேலதிக தகவல்களை இந்த காணொளியில் காணுங்கள்....

இதையும் தவறாமல் படிங்க