மீண்டும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்படும் சடலங்கள்? கொலைக்களமாக மாறுகிறதா இலங்கை?

608shares

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் கடத்தல் கொலை கொள்ளைச் சம்பவங்கள் மிகச்சாதாரணமாக நடைபெறத் தொடங்கியுள்ளது. பொலீசார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் பாதாள உலக குழுவினர் வரை தற்போது கொலை கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வர்த்தகர்கள் இருவரை வீட்டில் இருந்து கூட்டிச்சென்ற பொலீசார் பின்னர் அவர்களை கொலை செய்து எரித்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது சடலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.

யுத்த காலத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் அங்கும் இங்குமாக படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசப்பட்டார்களோ அதே போன்று தற்போது தென்னிலங்கையின் நிலை மாறியிருக்கிறது.

தென்னிலங்கை தற்போது பாதாள உலகக் குழுவினாலும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களாலும் போதைப் பொருள் கடத்தல்காரர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் கொலை கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் மீட்கப்படும் சம்பவங்களும் நடந்தேறத் தொடங்கியுள்ளது.

குறித்த சம்பவங்கள் எதிர் காலத்தில் இலங்கையில் நடைபெறப்போகும் படுகொலைச் சம்பவங்களை கட்டியங் கூறி நிற்கிறது.

வடகிழக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கக் கூடாது என இலட்சக்கணக்கான இராணுவத்தினரை குவித்து வைத்திருக்கும் அரசாங்கத்தினால் தலைநகரப் பகுதியில் நடைபெறும் கொலை கொள்ளை கடத்தல் போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வேடிக்கையாகவே உள்ளது.

நவகமுவ, கொடெல்லவத்த பகுதியில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நவகமுவ பொலிஸ் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து ரி 56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களும் ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க