அனுராதபுரம் விபத்தில் வவுனியாவை சேர்ந்த நால்வர் காயம்!

9shares

மதவாச்சி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மகாகுபுக்பொல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட நான்குபேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து விமானநிலையம் நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் வவுனியாவின் எல்லைப்பகுதியும், அனுராதபுரம் மாவட்டத்தின் மகாகுபுக்பொல பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் பயணித்துகொண்டிருந்த கனரகவாகனத்துடன் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கயஸ் வாகனத்தில் தாண்டிகுளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்திருந்த நிலையில் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சிலிருந்து வந்திருந்த இளைஞரை விமானநிலையத்திற்கு வழி அனுப்ப சென்றநிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துதொடர்பாக மதவாச்சி போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க