அதிரடிப்படையினரின் இரும்புப்பிடிக்குள் முக்கிய புள்ளியின் வலது கையாக செயற்பட்ட நபர்!

358shares

குடு சூட்டி என்பவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தியமை மற்றும் பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்றானின் சகாவும், வலது கையாகவும் செயற்பட்ட “ஜீபும்பா” என்றழைக்கப்படும் மொஹமட் சியாம் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே விசேட அதிரடிப் படையினரால் அவர் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளார் என்றும்,

கஞ்சிபான இம்ரானின் கட்டளையை நிறைவேற்றும் நபராகவே ‘ஜீபும்பா’ செயற்பட்டுவந்துள்ளார் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க