யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்!

415shares

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வீதியைக் கடக்க முயன்ற முதலை ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளது.

வடமராட்சி வல்லைச் சந்திக்கு அருகாமையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முதலை வீதியைக் கடக்க முயன்றபோது வீதியால் வந்த வாகனச் சக்கரத்தில் அகப்பட்டமையினால் தலையில் படுகாயமடைந்து பலியாகியுள்ளது.

சுமார் ஐந்தடி நீளமுடைய குறித்த முதலை வடமராட்சி முள்ளிப் பகுதியிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

குறித்த பகுதியில் முன்னரும் இதேபோன்று சில தடவைகள், முதலைகள் வெளிப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நன்னீர் ஏரிகள் மற்றும் வற்றாத குளங்கள் குறைவாக உள்ள நிலையில் முதலைகள் இல்லை என்றே கருதப்பட்டுவந்தது. ஆனாலும் உவர் நீர் முதலைகள் இவ்வாறு தரைப்பகுதியை நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

படம்: நன்றி தங்கராஜா பிரபாகரன்

இதையும் தவறாமல் படிங்க