இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை: நீங்கள் கடைப்பிடிக்கவேண்டியது என்ன?

  • Shan
  • March 14, 2019
66shares

இலங்கையில் அதிக வெப்ப நிலை நிலவுவதன் காரணமாக அனைத்து மக்களும் கூடுதல் அவதானத்துடன் இருக்கவேண்டும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, நாட்டின் வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் வெப்பநிலை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வேலைத்தளங்களில் கூடுதல் நீர் அருந்தி இயலுமானவரை நிழற்பாங்கான இடங்களை நாடுமாறு பணியாளர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மீது கூடுதல் கவனம் தேவை என்றும் வாகனங்களில் பிள்ளைகளை தனியாக விட வேண்டாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

வெப்ப விளைவால் தசைவலி மற்றும் உடற்சோர்வு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க