முன்மாதிரியாக செயற்பட்ட பொலிஸார்; பாராட்டும் மக்கள்!

  • Shan
  • March 14, 2019
153shares

சிறிலங்கா பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை அழைத்து ஒழுங்குபடுத்தி அனுப்பிவைத்துள்ளமை குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது.

இந்த சம்பவம் நேற்றுக் காலை மட்டக்களப்பு உப்பாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் போக்குவரத்து பாதுகாப்புக் கடமையில் நின்ற குறித்த பொலிஸார் அவ்வழியால் வந்த சிறுவனை அழைத்து அவரது ஒழுங்கின்றி காணப்பட்ட சீருடையினை சரிசெய்துள்ளார். குறித்த சிறுவனின் சட்டைப் பொத்தான் திறந்திருந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு ஒழுங்குபடுத்தியுள்ளார்.

மேலும், பாடசாலைக்குச் செல்லும்போது இவ்வாறு அலங்கோலமாகச் செல்லக்கூடாது எனவும், நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் எனவும் குறித்த பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் தமது முகனூல் பக்கத்தில் குறித்த பொலிஸாரை பாராட்டியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க