ஐ.பி.சி தமிழின் குறுந்திரை விழாவில் நடுவராக பங்கேற்கிறார் பிரபல ஈழத்தமிழ் இயக்குனர்!

92shares

ஐபிசி தமிழ் நடாத்தும் ஈழத்தமிழ் குறும்பட விழாவில் நடுவராக பங்குகொள்ள இயக்குனர் லெனின் எம் சிவம் பிரித்தானியா செல்லவிருக்கிறார்.

இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் லெனின் எம்.சிவம் ஈழத்தமிழ் மக்களின் அடையாள முகம் என்றே பார்க்கப்படுகிறார். கனடாவில் வசித்து வரும் இவர் புலம்பெயர் ஈழத்தமிழ் சினிமா உலகின் அதிசிறந்த கெட்டிக்காரன் என கருதப்படுகிறார்.

தனது திரை மொழி ஊடாக தமிழ் மக்களது மக்களினது வாழ்வை கச்சிதமாக சொன்ன திரைமொழியாளனாக விளங்குகிறார். இவரது a gun and a ring, roobha போன்ற திரைப்படங்கள் சர்வதேச அரங்கில் இன்றும் பேசப்படுகின்ற திரைப்படங்களாக காணப்படுகின்றன.

தமிழர்களின் வாழ்வியலை புலத்தில் நின்று பேசும் வல்லமை கொண்ட இயக்குனராக லெனின் எம்.சிவம் காணப்படுகிறார்.

ஐபிசி தமிழ் தொலைக்காட்சி மூன்றாவது பருவநிலையில் நடத்துகின்ற குறுந்திரை நிகழ்ச்சியில் 87 குறும்படங்கள் பங்கு பற்றியதுடன், இதில் தாயக குறும்படம் மற்றும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் குறும்படங்கள் என 6 குறும்படங்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றன.

இதிலிருந்து சிறந்த குறும்படம் ஒன்றை தெரிவு செய்வதற்காக இயக்குனர் லெனின் எம் சிவம் பிரித்தானியாவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முற்றிலும் இலவச அனுமதியினைக்கொண்ட இந்த குறுந்திர விழாவானது எதிர்வரும் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு Snakey Lane Middlesex, Feltham TW13 7NA என்ற இடத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தகதாகும்.

இதையும் தவறாமல் படிங்க