யாழ்ப்பாணத்தில் மிகப் பிரமாணடமாக அமைகின்றது தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி!

  • Shan
  • March 14, 2019
67shares

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னம் எனப்படும் தமிழரின் பண்பாட்டு நரம்பு இசைக் கருவியான யாழ் மிகப் பிரமாண்டமாக கைதடியில் அமைக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலைக்கு அண்மித்ததாக அமைக்கப்படும் இந்த பிரமாண்ட யாழ், யாழ்ப்பாணத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரத்தக்க வகையில் அமைக்கப்படுகின்றது.

குறித்த இடத்தில் கட்டியெழுப்பப்பட்டுவரும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக இது அமைவதுடன் இதற்கு அருகில் சுற்றுலா தகவல் மையம் மற்றும் நினைவுப் பொருள் விற்பனைக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுவருகிறது.

முற்றிலும் வடமாகாண சபையின் ஏற்பாட்டிலேயே இவை அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதையும் தவறாமல் படிங்க