யாழ் குடாநாட்டை பதறவைத்த அசம்பாவிதம்! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

28shares

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

யாழ். கோப்பாய் தெற்கு, கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்தவரே இன்று உயிரிழந்துள்ளார்.

பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார்.

அதனையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக சிறுவர்கள், வயதானவர்கள் அனைவரும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அதிகளவில் நீர் அருந்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க