கிளிநொச்சியை சென்றடைந்த விழிப்புணர்வு ஊர்தி பவனி!

6shares

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புணர்வு ஊர்தி இன்று(14) கிளிநொச்சியை வந்தடைந்தது

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை வந்தடைந்தது.

எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க