தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது வவுனியா சூரிய மின்கலத் தொகுதி!

8shares

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14) மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

சூரிய மின்சக்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 'வின்போஸ்' என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து நாளாந்தம் ஏழாயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.இவ்வாறு உற்பத்தி செய்து பெறப்படும் மின்சக்தியானது இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு தேசிய ரீதியில் பயன்படுத்தப்படவுள்ளது.

நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனும் கலந்து கொண்டு சூரிய மின்கலத் தொகுதி கட்டடத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இதையும் தவறாமல் படிங்க