யாழ்.மாவட்டத்துக்கு முதன் முதலாக கிடைத்த பொக்கிஷம்!

20shares

நூற்றி அறுபது இலட்சரூபா பெறுமதியான நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரத்தின் செயற்பாடுகள் இன்றிலிருந்து யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள காசநோய் மார்பு சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளதாக யாழ் மாவட்ட காச நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் யமுனாநந்தா தெரிவித்தார் .

இது தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களுக்கு அவர் விளக்கமிளிக்கையில்

தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தினால் இந்த இயந்திரம் யாழ் காசநோய் தடுப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் இலவசமாக சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். நோயாளர் பரிசோதிக்கப்படும்போது மருத்துவர் நேரடியாக அவற்றை அவதானிக்கமுடியும் என்பது சிறப்பம்சமாகும் .யாழ் மாவட்டத்தில் முதன்முறையாக இவ்வியந்திரம் பொருத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க