கச்சதீவு அந்தோனியார் திருவிழா ஒழுங்கமைப்பு!

8shares

கச்­ச­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆலய திருவிழா இந்த வரு­டம் மார்ச் மாதம் 16ஆம் திகதி நடத்­து­வ­தற்கு ஒழுங்­கு­கள் மேற்­கொள்ளப்­பட்­டுள்­ளன.

ஆலய பங்­குத்­தந்தை, யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கம், நெடுந்­தீவு பிர­தேச செய­ல­கம், பிரதேச சபை மற்­றும் பல்­வேறு அரச நிறு­வனங்­க­ளு­டன் இணைந்து இலங்கை கடற்படை­யி­ன­ரின் பங்­க­ளிப்­பு­டன் திரு­விழாவை நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த வரு­டம் இலங்­கை­யின் பல பிர­தே­சங்­களில் இருந்­தும் மற்­றும் இந்­தி­யா­வில் இருந்தும் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்து கொள்­வார்­கள் என எதிர்பார்க்கப்படுகின்­றது.

எதிர்­வ­ரும் 16ஆம் திகதி கச்­ச­தீ­வில் நடைபெறும் திரு­வி­ழா­வில் பங்­கு­பற்­றச் செல்லும் யாத்­தி­ரி­கர்­கள் திரு­வி­ழா­வுக்கு முதல் நாள் 15ஆம் திகதி காலை கச்­ச­தீவு சென்று இரவு தங்­கி­யி­ருந்து மறு­நாள் திருப்பலி­யில் கலந்­து­கொள்ள ஆவண செய்யப்­பட்­டுள்­ளது.

யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான பஸ் போக்­கு­வ­ரத்து வசதி யாழ் பேருந்து நிலை­யத்­தில் இருந்து குறிக்­காட்­டு­வான் வரை 15ஆம் திகதி காலை 3.30 மணி­யி­லி­ருந்து செயற்­ப­டுத்­தப்­ப­டும்.

பட­குப்­போக்­கு­வ­ரத்து வசதி குறிக்கட்டுவானில் காலை 4.30 மணியிலிருந்து பகல் 10.30 மணி­வரை செயற்­ப­டுத்­தப்­ப­டும்.

யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான ஒரு­வ­ழிப் பட­குக் கட்டண­மாக குறிக்­காட்­டு­வா­னில் இருந்து கச்ச­தீ­வுக்கு 325 ரூபா­வும், நெடுந்­தீ­வில் இருந்து கச்­ச­தீ­வுக்கு 225 ரூபா­வும் அற­வி­டத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதையும் தவறாமல் படிங்க