இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழை முற்றுகையிடப்போகும் வடக்கு மக்கள்?; யாழ் பல்கலைக்கழக சமூகம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

31shares

இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜெனிவாவில் மீண்டும் இலங்கைக்கு கால வகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தியும் நடைபெறவுள்ள எழுச்சிப் பேரணிக்கு அனைவரையும் அணி திரளுமாறு கோரிக்கை விடுத்திருக்கும் யாழ் பல்கலைக்கழக சமூகம் இந்தப் பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் 16 16 ஆம் திகதி பல்கலைக்கழக முன்றலில் காலை பத்து மணிக்கு ஆரம்பமாகும் இவ் எழுச்சிப்பேரணி யாழ் நகர் ஊடாக யாழ் மாநகர மைதானத்தை சென்றடையவுள்ளது.

ஆகவே தமிழினத்திற்கு நீதி கோரி முன்னெடுக்கும் இப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுள்ள பல்கலைக்கழகச் சமூகம் இப் பேரணியில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இன அழிப்பிற்கு நீதி கோரியும் இன ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் முன்னெடுக்கப்படுகின்ற இப் போராட்ட பேரணியில் கலந்து கொள்ளும் மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பருத்தித்துறை, நெல்லியடி, ஆவரங்கால், கோப்பாய், கல்வியங்காடு, ஊடாக காலை 8.10 மணிக்கும், அச்சுவேலி, ஆவரங்கால், கோப்பாய், கல்வியங்காடு, நல்லூர், ஊடாக காலை 8.20 மணிக்கும், வசாவிளான், புன்னாலைக்கட்டுவன், திருநெல்வேலி, ஊடாக் காலை 8.20 மணிக்கும், மாவட்டபுரம், சுண்ணாகம், கொக்குவில், ஊடாக காலை 8.10 மணிக்கும், காரைநகர், மூளாய், சுழிபுரம், சித்தங்கேணி, மானிப்பாய், ஊடாக காலை 8.20 மணிக்கும், கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், ஊடாக காலை 8.30 மணிக்கும், கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி ஊடாக காலை 8.30 மணிக்கும் என பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

அதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து துணுக்காய் பிரதேச செயலகம், மல்லாவி, வன்னிவிளாங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் ஊடாக காலை 7.00 மணிக்கும், முள்ளியவளை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, விசுவமடு, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், வன்னிவிளாங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் ஊடாக காலை 7.00 மணிக்கும், அளம்பில், சிலாவத்தை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

மேலும் வவுனியா மாவட்டத்திலிருந்து வவுனியா பழைய பஸ் தரிப்பிடம், ஓமந்தை, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், சிதம்பரபுரம், வவுனியாப் பல்கலைக்கழகம், ஓமந்தை, மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வன்னேரி, அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில், ஊற்றுப்புலம், கனகபுரம், கிளிநொச்சி, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், தேராவில், புளியம்பொக்கணை, பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், கல்மடு, ,ராமநாதபுரம், வட்டக்கச்சி, கோவிந்தன் கடைச்சந்தி, ரத்தினபுரம், பரந்தன், பளை ஊடாக காலை 7.00 மணிக்கும், கிளிநொச்சி வைத்தியசாலை, பரந்தன், பளை; ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழத்தை வந்தடையவுள்ளன.

மேலும் மன்னார் மாவட்டத்திலிருந்து தலைமன்னார், பேசாலை, மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும், முத்தரிப்புத்துறை, நானாட்டான், வங்காலை, மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும், சிலாபத்துறை, முருங்கன், மன்னார், முழங்காவில், பூநகரி ஊடாக காலை 7.00 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டு பல்கலைக்கழகத்தை வந்தடையவுள்ளன.

இதே வேளை தேவைகளிற்கேற்ப பேரூந்து ஒழுங்கு செய்யப்படும். முதலுதவி மற்றும் அவசர உதவி 0213214444 இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எழுச்சிப்பேரணி ஆரம்பமாகிய பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி, இந்து மகளீர் கல்லூரி வீதி, பிறவுண் வீதி, நாவலர் வீதி, மின்சார நிலைய வீதி, யாழ் நகரம், வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி ஊடாக மாநகர சபை மைதானத்தை (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) சென்றடையவுள்ளது.

இதற்கமைய காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி மாநகர சபை மைதானத்தை சென்றடைந்ததும் தெளிவூட்டல் உரை மற்றும் பிரகடன அறிக்கை வாசிக்கப்படும்.

குறிப்பாக தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கோசங்கள், பதாதைகள், பனர்கள் என்பன பல்கலைக்கழக சமூகத்தினாலேயே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் என்றும் யாழ் பல்கலைக்கழக சமூகம் அறிவித்தள்ளது.

இதையும் தவறாமல் படிங்க