கலாசார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

154shares

மன்னார் பிரதான பாலம் நுழைவாயில் பகுதியில் அண்மைக்காலமாக இடம் பெற்று வந்த கலாசார சீர் கேடுகளை தடுக்கும் வகையில் மன்னார் நகர சபையினால் குறித்த பகுதியில் 'சுற்றுலா பூங்கா' அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்


குறித்த பகுதியில் கடும் பற்றைகள் காணப்பட்டதோடு,அங்கு சமூக விரோத மற்றும் கலாசார சீர்கேடுகள் இடம் பெற்று வருவதாக சமூக ஆர்வலர்களினால் மன்னார் நகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்த போது பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள் இடம் பெற்றமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் மன்னார் நகர சபையின் பணியாளர்களை வைத்து குறித்த பகுதியில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது குறித்த பகுதியில் சுத்தம் செய்யப்பட்டு அழகுப்படுத்தி,மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

இதையும் தவறாமல் படிங்க