யாழ்ப்பாண மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளருக்கு கிடைத்த புதிய பதவி!

26shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவானது மிக நீண்ட நாட்களாக பிரதேச செயலாளர் இல்லாமல் இயங்கி வருகின்றது

அந்தவகையில் பிரதேச செயலக நடவடிக்கைகள் உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ் அவர்களின் தலைமையில் மக்களுக்கான சேவைகள் திறம்பட நடைபெற்று வந்தாலும் பிரதேச செயலாளர் மேற்கொள்ள வேண்டிய சில தேவைகளுக்காக மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் பதில் கடமைக்காக காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டு வந்தது

இந்நிலையில் இன்றைய தினம் முதல் புதிதாக பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிய தனபாலசிங்கம் அகிலன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க