மின்சார கட்டணம் அறவிடும் முறையால் அவதியுறும் மக்கள்!

10shares

அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சரின் தலமையில் இடம்பெற்றது.

குறித் கலந்துரையாடல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மின் கட்டணம் உரிய முறையில் கணிக்கப்படாது அதிக கட்டணத்தை ஒரே தடவையில் கட்டுமாறு மக்களை பணித்து மின்துண்டிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்வதாகவும், மூன்றுன்று மாதங்களிற்கு இந்த பிரதேசத்தில் உள்ள மக்களிற்கு இவ்வாறான இறுக்கமான கடைப்பிடிப்பை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் இதன்போது அதிகாரிகளிற்கு பணித்தார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் லார்ராலை மின் உற்பத்தி சபையின் தலைவர் முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் குருகுலராஜா பிரதேச சபை தவிசாளர்கள் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பூநகரி பிரதேச செயலர் திணைக்களங்களின் அதிகாரிகள் படையினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க